பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வெறுமனே வாக்குதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது – கயந்த கருணாதிலக்க வலியுறுத்தல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ள அரசாங்கம் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெறுமனே வாக்குதியாக மட்டும் இந்த விடயம் இருந்துவிடாமல் அதனை நிறைவேற்றிக்காட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சிலோன் டீ என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில், தரமற்ற தயாரிப்புகளை மேற்கொண்ட 23 நிறுவனங்களின் உற்பத்திகள் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கழிவு தேயிலை என்றவொரு விடயமானது நாட்டில் இல்லாது செய்யப்படுமெனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிலோன் டீ உற்பத்திகளை சர்வதேச சந்தையின் தரத்திற்கு ஏற்ற நிலைக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரமேஸ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!