கொரோனா விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்த சீனாவின் உண்மை முகம்!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பில் சீனா முழுமையான தகவலை வெளியிடாமல் மூடிமறைத்துள்ள சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் இதுவரை மீளாத நிலையில், சீனாவின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது. சீனா இதுவரை தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரழப்புகளின் எண்ணிக்கையை குறைத்தே வெளியிட்டு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2,478 புதிய பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது.

ஆனால் தற்போது கசிந்துள்ள ஆவணங்களில், வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் மட்டும் அதே நாளில் புதிதாக 5,918 நோயாளிகள் மருத்துவமனைகளை நாடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், மார்ச் 7 அன்று ஹூபே மாகாணம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாகாணத்தில் மொத்தம் 2,986 பேர் இறந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது, அனால் உண்மையில் 3,456 பேர் இறந்துள்ளனர்.

சீனா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.

சீனாவால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததுடன், தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியிலும் களமிறங்கியுள்ளனர்.

ஆனால் முன்தயாரிப்புகள் ஏதுமற்ற மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் அவர்களின் பொருளாதாரங்கள் பேரழிவைக் கண்டன.

2019-ல் மட்டும் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 என பதிவாகியிருந்த நிலையில், உலகிற்கு அவர்கள் வெறும் 44 எண்ணிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையையே உலக சுகாதார அமைப்பும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!