கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பு தொடக்கம் புத்தளம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என வானிலை அவதான நிலைய அதிகாரி முகமட் சாலிகேன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை தொடர்பாக எமது கெப்பிட்டல் செய்திப்பிரிவிற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்பதால் கரையோரப்பிரதேச மக்கள் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் சில வேளைகளில் கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!