பாதுகாப்பு அமைச்சு நிதி ஒதுக்கீட்டுக்கு 5 தமிழ் எம்.பிக்களே எதிர்ப்பு!

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு நேற்று நாடாளுமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நேற்று நடந்த விவாத முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோரே எதிர்த்து வாக்களித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!