சுவிஸில் 12 வயது சிறுமியை துப்பாக்கியுடன் துரத்திய மர்ம நபர்!

சுவிட்சர்லாந்தில் பிரதான ரயில் நிலையம் ஒன்றில் நடந்து சென்ற சிறுமியை துப்பாக்கியுடன் அடையாளம் தெரியாத நபர் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் கைது நடவடிக்கையை முன்னெடுக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த நவம்பர் 27, வெள்ளிக்கிழமை மாலை நேரம் Grenzbach பகுதியில் இருந்து Kreuzlingen நோக்கி 12 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

அப்போது Brückenstrasse பாலம் மீது துப்பாக்கியுடன் ஒருவர் எதிர்வரும் மிதிவண்டி பயணியை குறிவைத்தபடி நின்று மிரட்டியுள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிறுமியை, அந்த துப்பாக்கிதாரி துரத்தியதாக பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிறுமி அந்த நபரிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில், தற்போது அந்த நபர் தொடர்பில் சாட்சிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

30 முதல் 40 வயது பருத்த தேக அமைப்பு கொண்ட அந்த நபர், சம்பவத்தின் போது கருப்பு உடையில் இருந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!