பிரித்தானியாவில் மனைவியை தேடிச்சென்ற நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தன் மனைவியை தேடிச் சென்ற நபர் ஒருவர், ஹொட்டல் அறை ஒன்றில் அந்த பெண் வேறொருவருடன் மோசமான நிலையில் இருப்பதை கையும் களவுமாக கண்டுபிடித்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த Mike Morgan (55), தன் மனைவி Rossalin (40)இன் கார் ஹொட்டல் ஒன்றின் முன் நிற்பதைக் கண்டுள்ளார்.

அவர் அந்த ஹொட்டலுக்குள் நுழையவும், அவரை கண்ட ஹொட்டல் பணியாளர்கள் ஒருவருக்கொருவர் ஏதோ கிசுகிசுத்துள்ளார்கள்.

மனைவி இருந்த அறையைக் கண்டுபிடித்த Morgan, கதவைத் தட்ட, கதவைத் திறந்த மனைவி அரைகுறை ஆடையுடன் இருப்பதைக் கவனித்துள்ளார்.

மேலும், அந்த அறையின் குளியலறையில் யாரோ இருப்பதை கவனித்த Morgan, அங்கு சென்று பார்த்தால், Neil Bannister என்பவர் குளித்துக்கொண்டிருப்பதைக் காண, அவருக்கு ஆத்திரம் தலைக்கேறியிருக்கிறது.

அவரை இழுத்துப்போட்டு அடிக்க, அவர் திருப்பியடிக்க, ஒரே களேபரமாகியிருக்கிறது. ஆனால், இந்த சம்பவம் நடந்தபோது தானும் Morganம் கணவன் மனைவியாக இல்லை என்றும், ஏற்கனவே தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் தாய்லாந்தைச் சேர்ந்தவரான Rossalin.

மனைவியைக் கையும் களவுமாக பிடித்த கணவன் இப்போது, அவர்களை தாக்கியதாகவும் மிரட்டியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிறை செல்ல நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Morgan பிரித்தானியாவில் பிரபல ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!