தமது சுயநலத்திற்காகவே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தலைவர்கள் வாக்களிக்கவில்லை : வீ.ஆனந்தசங்கரி!

எதிர்காலம் குறித்த தமது சுயநலத்திற்காகவே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தலைவர்கள் வாக்களிக்வில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்கால தன்னலம் கருதியே இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பதில்லை என தமிழ் தலைவர்கள் முடிவெடுத்திருப்பார்கள்.

இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திலே எதிர்க் கட்சிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்து வருவதென்பது இன்று நேற்றல்ல இது தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்ற விடயமாகும்.

வரவு செலவு திட்டத்தை எதிர்த்தால் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என்பதே இதற்கு காரணமாகின்றது. மறைமுகமாக அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையிலேயே நேற்றும் நடந்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் நினைத்திருந்தால் தமழ் மக்கள் பற்றி சிங்கள தலைமைகள் இழிவாக பேசுகின்றமை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து திர்த்து வாக்களித்திருக்கலாம். ஆனால் அதனை அதனை அவர்கள் செய்திருக்கவில்லை.

எதிர்த்தோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்காது விட்டதன் பிரதிபலன்களையும், நன்மைகளையும் அவர்கள் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!