மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க கட்சி தலைவர்கள் கூட்டம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு உடன்பாட்டை எட்டும் நோக்கில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு தேர்தலை நடத்துவதற்கான முடிவுக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கட்சித் தலைவர்களின் ஒருமித்த கருத்துடன் அது தொடர்பான முன்மொழிவு மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!