ஜப்பானை உலுக்கிய டுவிட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகருக்கு அருகில் சாமா எனுமிடத்தை சேர்ந்தவர் தகாஹிரோ ஷிரைசி ( வயது 30) .வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை எண்ணம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து, தானும் அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து தயார் என பேசி நட்பாக்கி கொள்வது இவரது வழக்கம்.

தற்கொலை எண்ணம் உள்ளவர்களை தன் வீட்டுக்கு அழைப்பார். பின்னர் அவர்களை கொலை செய்து அவர்களின் தலை மற்றும் உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து விடுவார்.

ஷிரைசி இப்படி 15 முதல் 26 வயதுடைய 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை நட்பாக்கி கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார்.

2017ஆம் ஆண்டு ஒருவர் தனது தங்கையின் டுவிட்டர் கணக்கை ஆய்வு செய்யும் போது ஒருவரின் டுவிட்டர் அழைப்பை பார்த்து அதிர்ந்து உள்ளார். தற்கொலை செய்ய வேண்டுமா என்னிடம் வாருங்கள் தற்கொலை குறித்து சிரமப்படுபவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எனக்கு தனி மெசேஜ் அனுப்புங்கள் என அழைப்பு விடுத்து இருந்தார்.

உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக போலீசார் மெசேஜ் அனுப்பிய தகாஹிரோ ஷிரைசி வீட்டை கண்டு பிடித்து சோதனை செய்தனர் அங்கு சில மனித உடல் உறுப்புகளைக் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு தான் மற்ற தலைகள் மற்றும் உடல் உறுப்புகளை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள்.

ஷிரைசியை உள்ளூர் மக்கள் டுவிட்டர் கொலைகாரன் என அழைக்கிறார்கள்.

நீதிமன்ற விசாரணையில் ஒன்பது பேரை கொலை செய்தததை ஷிரைசி ஒப்புக் கொண்டார். அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்

ஷிரைசி தரப்பில் வாதாடிய வழக்கறிஞரோ, இவர் கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதத்துடன் தான் கொலை செய்து இருக்கிறார், எனவே சம்மதத்துடன் கொலை செய்ததை கவனத்தில் கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார்.

ஆனால் ஷிரைசியே, கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமல் கொலை செய்ததாக வாதத்தின்போது தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களை கொலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது புலனாய்வில் கிடைத்த ஆதாரம் மூலம் தெரிய வருவதால், ஷிரைசிக்கு மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவத்தால், தற்கொலை அல்லது தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதை டுவிட்டர் பயனர்கள் ஊக்குவிக்கக் கூடாது என ஒரு புதிய விதியை டுவிட்டர் நிர்வாகம் கொண்டு வந்தது.

ஜப்பானின் தற்கொலை விகிதம் உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. சமீபத்தில் தொற்றுநோயின் பாதிப்புகளால் மக்கள் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த ஆண்டு இந்த தற்கொலை எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!