விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்: முதல்வர் உறுதி!

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.அங்கு ரூ.627 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ரூ.118.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.மேலும் ரூ.35 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.தமிழக அரசு பொதுமக்களை தேடிச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று நிறைவேற்றி வருகிறது.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!