ஆஸ்துமாவால் உயிரிழந்த பிரித்தானிய சிறுமியின் மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி ஒருவர் கடுமையான ஆஸ்துமா காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு ஒருவகை காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு Ella Adoo-Kissi-Debrah என்ற சிறுமி கடுமையான ஆஸ்துமா பிரச்சனையால் உயிரிழந்த நிலையில், அவர மரணத்திற்கு காற்று மாசுபாடும் ஒரு காரணம் என்று பிரித்தானியாவில் உள்ள coroner(நீதித்துறை அலுவலகர்) தெரிவித்துள்ளார். ஒருவரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு காரணமாக இருப்பதால், பிரித்தானியாவில் இது முதல் சட்ட வழக்கு என்று பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து வெளியாகியிருக்கும் செய்தியில், Ella Adoo-Kissi-Debrah என்ற 9 வயது சிறுமி கடந்த 2013-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

செய்தி நிறுவனமான ஏ.எப்.பி.யின் அறிக்கையின்படி, அவர் இறப்பதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், சுவாசப் பிரச்சனை காரணமாக கிட்டத்தட்ட 30 முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்ட்டார்.

தலைநகரான லண்டனின் தென்கிழக்கு பகுதியில் சிறுமி வசித்து வந்துள்ளார். அவர் வசித்து வந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் கடுமையான போக்குவரத்து கொண்ட சாலை இருந்துள்ளது. இங்கு பெரும்பாலும் அதிக போக்குவரத்து இருக்கும்.

அந்த வகையில், Ella Adoo-Kissi-Debrah-ன் மரணத்திற்கு காற்று மாசுபாடும் ஒரு காரணம், தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், அவரின் மரணத்திற்கு காற்று மாசுபாடும் பங்களிப்பை அளித்துள்ளது என்று துணை coroner(Philip Barlow) தெரிவித்துள்ளார்.

சிறுமியின் இறப்புச் சான்றிதழில் இது ஒரு காரணமாக இருப்பதாகவும், இது பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு என்றும் கூறப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை விட அதிகமான நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) அளவை அவர் வெளிப்படுத்தினார். அவரது வெளிப்பாட்டின் முக்கிய ஆதாரம் போக்குவரத்து உமிழ்வு ஆகும் என்று Philip Barlow கூறியுள்ளார்.

Ella Adoo-Kissi-Debrah மரணத்தில் காற்று மாசுபாடு குறித்து விரிவாக கூறிய அவர், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் NO2 அளவு குறித்து பதிவு செய்வது முக்கிய என்றும், அது கூட அவரின் மரணத்திற்கு பங்களித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் Ella Adoo-Kissi-Debrah மரணம் குறித்த முதல் நீதிமன்ற விசாரணையில், அவர் கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இருப்பினும் இது தொடர்பான வழக்கு விசாரணை பரிசீலிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காற்று மாசுபாடு நிபுணர் Stephen Holgate, NO2-வில் தீங்கு விளைவிக்க கூடிய துகள்கள் இருப்பதையும், இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பங்கள் இருப்பதையும் அவர் கண்டறிந்துள்ளார்.

அவர் தனது சுற்றுப்புறங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் தரம் குறித்து, கத்தி விளிம்பில் வாழ்வதாக விசாரணையில் கூறினார்.

குளிர்கால காற்று மாசுபாடு, அதாவது அந்த சிறுமியின் மரணத்திற்கான முந்தைய மாதங்கள் அவரது ஆஸ்துமாவை மோசமாக்கியுள்ளதாக, சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மருந்தியல் பேராசிரியரான ஹோல்கேட் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் காற்று மாசுபாடு மற்றும் பொது சுகாதாரம் குறித்து பணிபுரியும் வல்லுநர்கள், Ella Adoo-Kissi-Debrah வழக்கு, காற்று மாசுபாட்டின் ஆபத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் கரோலின் லூகாஸ், இந்த வழக்கின தீர்ப்பு காற்று மாசுபாட்டின் கொடிய தாக்கத்தை அங்கீகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், Ella Adoo-Kissi-Debrah தாய் ரோசாமண்ட் தனது மகளின் ஆரோக்கியம் மிகவும் மோசமானதற்கு, காற்றின் தரம் தான் காரணம் என்பதை நான் அறிந்திருந்தால், அப்போதே அந்த பகுதியில் இருந்து வெளியேறியிருப்பேன்.

தனது மகளுக்கு நீதி வேண்டும், மற்ற குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் தீர்ப்பை விரும்புகிறேன். .நாங்கள் எங்கள் நகரங்களைச் சுற்றி நடக்கும்போது, ​​காற்று மாசுபாடு உள்ளது.

இந்த விஷயம் வெகு தொலைவில் உள்ளது. இதைப் பற்றி முழு சுகாதார பிரச்சாரம் இருக்க வேண்டும். இது மிகவும் தீவிரமான சுகாதார விஷயம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், பிரித்தானியாவில் 28,000 முதல் 36,000 இறப்புகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் மேயர் அலுவலகத்தின் புள்ளிவிவரங்களின்படி, WHO பரிந்துரைத்த காற்று மாசுபாட்டிற்கான வரம்புகள் கிட்டத்தட்ட அனைத்து பிரித்தானியா தலைநகரிலும் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!