துபாயில் வாந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தை: ஸ்கேன் செய்தபோது அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

துபாயில் காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வயிற்றில் 8 காந்த மணிகள் இருப்பதை ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஜோர்டானை சேர்ந்த தம்பதி ஹுதா ஒமர் மொஸ்பா காசிம் மற்றும் மஹர் ஷேக் யாசின். இவர்களுக்கு சல்மா (1) என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் மூவரும் துபாயில் வசித்து வந்தனர்.

சல்மாவுக்கு நேற்று திடீரென்று கடும் காய்ச்சல் மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.

அப்போது ஸ்கேன் பரிசோதனையில் சல்மா வயிற்றில் 8 காந்த மணிகள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

விளையாடும் போது அந்த மணிகளை குழந்தை விழுங்கி இருக்கலாம் என பெற்றோர் தெரிவித்தனர்.

காந்த மணிகள் குடலில் இருந்ததால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டு சீழ் வைத்திருந்தது.

இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோன்ற காந்தமணிகள் குழந்தைகள் வயிற்றில் தங்கியிருந்தால் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் 3 அறுவை சிகிச்சைகளில் அந்த காந்த மணிகள் அகற்றப்பட்டு, குடல் பாதிப்பு சரி செய்யப்பட்டு குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!