கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை தகனம் செய்ய நீதிமன்றம் தடை!

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் வரை, கொரோனா தொற்றால் இறந்த சேய்க் அப்துல் காதர் என்பவரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்க காலி நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்றால் மரணித்த சேய்க் அப்துல் காதர் (84-வயது) என்பவரின் குடும்பத்தினர், அவரது உடலை இறுதி முடிவு எட்டும் வரை தகனம் செய்யாமல் வைத்திருக்க நீதிமன்ற தலையீட்டை கோரி தாக்கல் செய்ய மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை குளிரூட்டிய கொள்கலன்களின் வைத்து பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!