காங்கேசன்துறை துறைமுகத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நேற்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது காங்கேசன்துறை – காரைக்கால் இடையேயான கப்பல் சேவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அடிப்படை வேலைகளை முடித்து கொண்டு விரைவில் துறைமுகம் திறக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!