புதியவகை வைரஸ் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் விமான நிலையங்களை திறப்பதன் ஊடாக புதியவகை வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றானது மிக வேகமாக பரவும் அபாயம் உள்ள நிலையைில் இதனால் சுற்றுலாப்பயணிகளை கருத்திற்கொண்டு நாட்டின் விமான நிலையங்களை திறக்கும் திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை புதியவகை வைரஸ் தொற்றாளது இளம் சமூகத்தினரிடையே பரவலடையும் சாத்தியம் உள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் புதியவகை வைரஸ் தொற்று நாட்டில் பரவலடைந்துள்ளமை தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அரசவைத்திய அதிகாரிகள் சங்கததின் உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

எனவே இயலுமானவரை பி சி ஆர் பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றானது தற்போது அவுஸ்திரேலியா நியுசிலாந்து சிங்கப்பூர் இத்தாலி இஸ்ரேல் போன்ற நாடுகளில் மிகவேகமாக பரவியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் ரஷ்ய சுற்றுலா குழுவினர் நாட்டிற்கு வருகை தருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக குறித்த நடவடிக்கை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!