வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலிய மாவட்டத்தின் சில இடங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஏனைய சில பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டவலியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!