இன்று மாநகர முதல்வர் தெரிவு! – போட்டியில் குதித்தார் மணி.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவிக்கு பொது வேட்பாளளராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிடவுள்ளார்

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

“ பாதீடு தோற்கடிக்கப்பட்டு பதவியிழந்த முதல்வர் ஆனல்ட்டை மீண்டும் களமிறக்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அவர் மீளவும் முதல்வராகத் தெரிவானால் பாதீடு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும் நிலை ஏற்படும். எனவே தற்போதனைய ஆட்சிக்காலத்தைத் தக்கவைத்து அனைவருடனும் இணைந்து உறுதியான ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எனவே கட்சி பேதமின்றி சபையின் அனைத்து உறுப்பினர்களும் உறுதியான ஆட்சிக்கு வாக்களிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவு இன்று முற்பகல் 9.30 மணிக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!