உயிரிழப்பவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் ஆராயும் குழுவில் புவிச் சரிதவியல் நிபுணர்கள் இணைப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் புவிச் சரிதவியல் நிபுணர்கள் இருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதன் மூலம் நிலத்தடி நீருக்கு ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பில் ஆராய்வது குறித்த நிபுணர்களின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றாடல் அமைச்சில் பணிபுரியும் குறித்த இரு நிபுணர்களையும் இந்த குழுவுக்கு நியமிக்குமாறு அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவுக்கு அமைச்சரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!