7 மாதங்களில் ஆட்சி கவிழும்!

தற்போதைய அரசாங்கம், இன்னும் 7 மாதங்களுக்கு மட்டுமே ஆட்சியில் இருக்கும் என ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, எதிர்வு கூறியுள்ளார்.அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஏழு மாதங்களின் பின்னர், அரசாங்கம் வீழும். அதனால்தான் அதற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்த, அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றால், மக்கள் நாளுக்கு நாள் மரணிக்கும் போது, அரசாங்கம் தனது தோல்வியை மறைக்க, தேர்தல் பெறுபேறுகளைக் காட்ட முயற்சி எடுக்கிறது. அந்த முயற்சியை எதிர்க்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!