சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகம் தான்!

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை இராணுவம் தற்காலிக அடிப்படையிலேயே பொறுப்பேற்றுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தி வருவதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இராணுவத்தினர் நிரந்தரமாக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடப் போவதில்லை. செலவை குறைக்கும் நோக்கில் இவ்வாறு அச்சிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று மாற்றமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இராணுவத்தினரின் பிரதான கடப்பாடு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதே, அதன்மேல் தான் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!