‘தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக அரசு’ – சீமான் மனப்பூர்வமான நன்றி!

தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட தமிழர்க்ள பலர் இந்த அறிவிப்பை வரவேற்று வரவேற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமானும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி என சீமான் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!