நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் சத்தியப் பிரமாணம்!

எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பதவியேற்றார்.

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்விலேயே அவர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் தனது பதவிப்பிரமாணத்தினை மேற்கொண்டார்.

எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அத்துரலியே ரத்ன தேரர், வர்த்தமானியில் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!