கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம்; பாராட்டியது உலக சுகாதார நிறுவனம்

உலகளவில் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்று இறப்பு விகிதம் (0.5%) மிகக் குறைவாக இருப்பதாகவும் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை சிறப்பாக செயற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

ஒக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா தொற்று அதிகரித்துள்ள போதிலும் தற்போது அடையாளம் காணப்படும் நோயாளிகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா தொற்றினால் 200 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் இலங்கையில் 40,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வலுவான பொது சுகாதார நடவடிக்கைகளும் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளும் இதற்கு காரணம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!