கொமும்பில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் 468 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 183 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி, மட்டக்குளி பகுதியிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மட்டக்குளி பகுதியில் நேற்று மாத்திரம் 82 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் கொம்பனி வீதி பகுதியில் 27 பேரும், கிரேண்பாஸ் பகுதியில் 18 பேரும், கொள்ளுபிட்டி மற்றும் பொறள்ளை பகுதியில் தலா 12 பேரும், தெமட்டகொடை பகுதியில் 11 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 72 பேருக்கு நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் 11 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 8 பேரும், அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா 7 பேரும், மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா 6 பேரும் வவுனியா மாவட்டத்தில் இரண்டு பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 542 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 37 ஆயிரத்து 817 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 210 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!