அரசியல் கைதிகளுக்கு பிணை நிற்கத் தயார்!

தனக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பளிக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அவர்களைப் பிணையில் விடுதலை செய்யவேண்டுமாயின் பிணை நிற்க, எம்.பிக்களாகிய தாங்கள் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வேதனத் திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவத்தைச் சேர்ந்தவரே இருக்கிறார். கொரோனா வைரஸ் ஒழிப்புச் செயலணியின் தலைவராகவும் இராணுவத் தளபதியே இருக்கிறார். அதுமட்டுமன்றி 25 மாவட்டங்களுக்கும் தலா ஓர் இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தகுதிவாய்ந்த சிவில் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றார்.

‘இலங்கை ஒரு தீவாக இருந்தும், நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதற்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமைக்கு, இராணுவ மயமாக்கலே முக்கிய காரணமாகும்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!