ஓரின சேர்க்கை திருமணம் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் இறுதி வாய்ப்பு!

ஓரின சேர்க்கை திருமணங்களை சட்டப்படி அங்கீகரிக்க மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓரின சேர்க்கை திருமணம் செய்ய விரும்பும் 2 பெண்களும், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட 2 ஆண்களும் அம்மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவற்றுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியும் மத்திய, டெல்லி அரசுகள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இந்தநிலையில், டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராஜீவ் சகாய் எண்ட்லா, சஞ்சீவ் நருல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் யோசனை பெற்றிருப்பதாகவும், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் மத்திய, டெல்லி அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இது கடைசி வாய்ப்பு என்றும் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!