கைவிடப்பட்டது போராட்டம் – பல்கலையைவிட்டு நகராதோருக்கு PCR…!

யாழ். பல்கலைகழகத்தில் போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேற மறுக்கும் நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடமானது நேற்று இரவு அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் அமைக்க்பட்டிருந்த நினைவிடமொன்றே இவ்வாறு அகற்றப்பட்டது.

அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியின் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு முன்னைய அரசாங்க காலப்பகுதியில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதுடன், நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நினைவிடத்தை அகற்றும் நடவடிக்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முன்னெடுக்கபட்டதாக உபவேந்தர் சிவகொழுந்து ஶ்ரீசற்குணராஜா குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!