உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீதான விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 8 , 9 10 ஆகிய திகதிகளில் ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு பிரதம நீதிபதி ஜயந்த ஜயசூரிய புவனேக அலுவிஹாரே, சிசிர டீ ஆப்ரூ பிரியந்த ஜயவர்தன எல் டீ பீ தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும் அதனை தடுப்பதற்கு தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!