நாளாந்தம் இழக்கப்படும் ஜனநாயகத்தன்மை : கரு குற்றச்சாட்டு!

இலங்கையில், நாளாந்தம் ஜனநாயகத்தன்மை இழக்கப்படுவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஆனால் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக சர்வதிகார ஆட்சியொன்று உருவானது. அதனைக் கூறுவதற்கு நாம் அச்சம் அடைவதில்லை. ஜனநாயாகம் நாளாந்தம் இழக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.அதனால் இதனைத் தெளிவாக கூறுகின்றோம்.உரிமைகள் மீறப்படுகின்ற விடயங்கள் கடுமையாக இடம்பெறுகின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவர்கள் என்ன செய்தார்கள் என எவரேனும் கேட்டால், எதனையும் செய்யவில்லை என்று கவலையுடன் கூற முடியும். மக்கள் எதிர்பார்த்த சுபீட்மான நிலைமைக்கு மாறாக, இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், 20 ஆவது திருத்தமும் தீப்பொறியாக மாறியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!