பருத்தித்துறையில் இருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து திரும்பிய இவர்கள் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் இருவருடனும் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!