பொருளாதாரத்தில் அசுர வேகம்: உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நாடு!

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பல ஸ்தம்பித்து பொருளாதாரத்தில் நிலைகுலைந்துள்ள நிலையில், சீனா மட்டும் கடந்த ஆண்டில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்துடன் உலக நாடுகள் போராடியதால் உலகப் பொருளாதாரம் 4.3 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

ஆனால் திங்கட்கிழமை வெளியான முக்கிய தரவுகளின் அடிப்படையில், சீனா மட்டும் கடந்த ஓராண்டில் 2.3 சதவீத வளர்ச்சியை சாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முதல் காலாண்டில் சீன பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் 6.8 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில்,

இரண்டு, மூன்று மற்றும் நான்காம் காலாண்டுகளில் புத்துயிர் பெற்ற சீன பொருளாதாரம் முறையே 3.2, 4.9 மற்றும் 6.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

இருப்பினும் 1976-கு பின்னர் சீனாவின் மிக மோசமான பொருளாதார வளர்ச்சி இதுவென கூறப்படுகிறது.

2.3 சதவீத வளர்ச்சி என்பது, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பானது என சீன நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவ்வித சரிவை எதிர்கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ஒட்டுமொத்தமாக 7.4 சதவீத சரிவையும், ஜப்பான் 5.3 சதவீத பொருளாதார வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

ஆனால், சீனாவின் வர்த்தக உபரி என்பது கடந்த ஆண்டு 535 பில்லியன் டொலர்களை எட்டியது. இது 2019 ம் ஆண்டை விடவும் 27 சதவீதம் அதிகமாகும்.

சீனாவில் இருந்தே கொரோனா பெருந்தொற்று பரவியதாக கூறப்படுவரும் நிலையிலும்,

மருத்துவம் தொடர்பான பாதுகாப்பு கருவிகள் மற்றும் வீட்டு உபயோக மின் பொருட்களுக்கு உலக நாடுகள் பல சீனாவையே நம்பியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!