பணத்தாசையில் பெற்ற மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

இந்திய மாநிலம் பீகாரில் 13 வயதே ஆகும் சிறுமியை பணத்துக்காக 2 பேருக்கு பெற்றத் தாயே விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த செவ்வாய்க்கிழமை சிப்பாபரோட் காவல் நிலையப் பகுதியில் 13 மூன்று வயது சிறுமி ஒருவர் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டறியப்பட்டார். அவர் குழந்தைகள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வையனுடன் நட்பாகப் பழகிவந்துள்ளார்.

இந்த விஷயம் அவரது தாய்க்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மக்களை உடனடியாக திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, சிடாபரோட் பகுதியைச் சேர்ந்த பன்வாரி (27) என்பவரிடம் ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் திகதி, தனது மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் அவருடன் வாழ விருப்பமில்லாமல் சிறுமி ஓடிவந்துள்ளார். அப்படியும் விடாமல், அவரது தாய், சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து, அவரை மீண்டும் டிசம்பர் 24-ஆம் திகதி அதே பகுதியில் முகேஷ் என்பவருக்கு நிர்பந்தமாக திருமணம் செய்துகொடுத்துள்ளார். முகேஷிடமும் ரூ. 1.25 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் சிறுமியின் தாய்.

இப்படி 17 நாட்களில் அந்த சிறுமி 2 வெவ்வேறு ஆண்களிடம் பணத்துக்காக விற்கப்பட்டுள்ளார்.

முகேஷின் வீட்டில் அடைபட்டிருந்த சிறுமி, எப்படியோ தப்பித்து வெகு தூரம் ஓடியுள்ளார். பின்னர் தெருக்களில் பசியும் பட்டினியாக அனாதையாக சுற்றித்திறித்துள்ளார். இந்த நிலையில் தான் காவல்துறையின் கண்ணில் சிக்கியுள்ளார்.

சிறுமி வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த திங்களன்று பன்வாரி, முகேஷ் மற்றும் கீதா சிங், திரிலோக் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மைனர் சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுத்து, Baran-ல் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்ப Child Welfare Committee உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!