கோவிட் விவகாரத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்: அதிர்ச்சியில் உலக நாடுகள்!

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் 2017-ல் ஒரு குகையில் மாதிரிகளை சேகரிக்கும் போது COVID-19 பாதிக்கப்பட்ட வெளவால்களிடம் கடிவாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் தற்போது பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு சீனாவின் வுஹான் நகரில் பதிவானது. பின்னர் ஆயிரக்கணக்காண மக்களுக்கு பரவிதைத்த தொடர்ந்து, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச பயணிகள் மூலமாக பரவியது.

கொரோனாவின் பிறப்பிடம் சீனா என உலகம் முழுவதும் கூறப்பட்டுவரும் நிலையில், WHO அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழு சீனாவில் ஆய்வு நடத்த கடந்த வாரம் வுஹான் நகருக்கு சென்றுள்ளது.

இந்த ஆய்வு நடைபெற்றுவரும் நிலையில், 2017-ல் சீன விஞ்ஞானிகள் ஒரு குகையில் மாதிரிகளை சேகரிக்கும் போது COVID-19 பாதிக்கப்பட்ட வெளவால்களை ஆய்வு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

குகையில் ஆய்வு நடத்தியபோது வௌவால்களிடம் கடிவாங்கியதாக வுஹான் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளது தற்போது உலகம் முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு வீடியோவில், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) விஞ்ஞானிகள் கையுறைகள் மற்றும் முகமூடிகள் இல்லாமல் நேரடியாக வைரஸ்களுடன் பணியாற்றுவதைக் காட்டுகிறது. இது PPE மீதான உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு விதிகளை மீறுவதாக இருந்தது.

ஒரு விஞ்ஞானி தனது வெறும் கைகளால் ஒரு வௌவாலைப் பிடிப்பதை வீடியோவில் காண முடிகிறது.

ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு வௌவாலின் கூர்மையான பற்கள் (Fangs) அவரது ரப்பர் கையுறைகள் வழியாக ‘ஊசி போல’ குத்தியதாக கூறினார்.

இந்த வெளிப்பாடுகள், மற்றவர்களைவிட விஞ்ஞானிகள் தான் முதல்முதலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இருப்பாதைக் காட்டுகிறது.

இந்நிலையில், கோவிட் -19 இன் தோற்றம் குறித்து விசாரிக்கும் WHO குழுவுக்கு இது மேலும் கேள்விகளை எழுப்புகிறது.

உலகளவில் கடந்த ஒரு வருடத்தில் 95 மில்லியன் மக்களுக்கு தொற்று ஏற்பட்டு, அதில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் பாதிப்புகளும், இறப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றது.

இதனால் பல நாடுகளில் இயங்கிவரும் அனைத்து பொது மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதற்கிடையில், வெவ்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவசரகால தடுப்புமருந்தாக அங்கிகரிக்கப்பட்டு பல நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!