மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு விசேட நடவடிக்கை!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 10 ஆயிரத்து தொள்ளாயிரத்து 25 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதன்படி, அவர்களில் 103 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தைப்பொங்களுக்கு முந்தைய தினத்தில், கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு சென்ற நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்

குறித்த தினத்தில் ஆயிரத்து 658 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே, 21 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில், 103 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு, 11 இடங்களில் தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாத நபர்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை கடந்த ஐந்தாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இரண்டாயிரத்து 807 பேர் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அவர்களில் 52 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு கோட்டை, காலி முகத்திடல் மற்றும் வெள்ளவத்தை முதல் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்கின்ற நபர்களுக்கும், கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!