அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – விகாராதிபதி ஊடாக ஜனாதிபதிக்கு மனு!

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ்.மாவட்டத்தில் உள்ள சர்வ மத தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் மத தலைவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு நேற்று யாழ்.ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!