இன்று மீண்டும் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.

மேற்படி விமான நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக மூடப்பட்டது. அரசாங்கம் மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவொன்று விமான நிலையத்திற்குச் சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டது.

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதனையடுத்து அவர்கள் இங்கு வந்ததும் மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!