நாட்டில் கொரோனா தொற்று -இன்றைய நிலவரம்

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றையதினம் 768 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது,

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது,

மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.,

மல்லவகெதர பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணொருவர் நேற்று உயிரிழந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது,

கொவிட் நியூமோனியாவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது,

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 621 பேர் குணமடைந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7ஆயிரத்து 700 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 688 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.​

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

அவர்களுள் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலையில் மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தமையினால் சுய தனிமைப் படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!