சீரழிக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமி: பின்னர் நடந்த சம்பவம்!

வின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதி ஒன்றில் 14 வயதேயான சிறுமி ஒருவருக்கே இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. திங்களன்று சுமார் 5 மணியளவில், தவறிழைத்ததாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால் சில மணி நேரம் கடந்த நிலையில், சிறுமி வீடு திரும்பாதது கண்டு, கலக்கமுற்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியை தேடி அலைந்துள்ளனர்.

இந்த நிலையில் புதர்களுக்கு இடையே அழுகுரல் ஒன்று கேட்கவே, தவிப்புடன் சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டிருந்தார். மருத்துவ சோதனையில் அவர் சீரழிக்கப்பட்டது உறுதியான நிலையில், 35 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின்போது, தனியாக சிக்கிய சிறுமியை, அந்த 35 வயது நபர் கடத்திச் சென்று சீரழித்துள்ளார்.

பின்னர் பள்ளம் ஒன்றில் தள்ளிவிட்டுள்ளார். ஆனாலும் தாம் பொலிசில் சிக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்த அந்த நபர், சிறுமியை கல்லால் அடித்து, பின்னர் இறந்ததாக கருதி உயிருடன் இருந்த சிறுமியை புதைத்துள்ளார்.

இந்த நிலையிலேயெ சிறுமியை காணவில்லை என தேடிச் சென்ற குடும்பத்தினருக்கு புதர்களுக்கு இடையே இருந்து அழுகுரல் கேட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியை மீட்ட குடும்பத்தினர், உடனே அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குற்றுயிராக இருந்த நிலையிலும், பொலிசாருக்கு தம்மை சீரழித்த நபரை அடையாளம் காட்டியுள்ளார் அந்த சிறுமி.

தொடர்ந்து பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!