தடுப்பூசி போட்டுக்கொள்வது போல் நாடகமாடிய அதிகாரிகள்: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகப் பொய்யாகப் படம்பிடித்துக் கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகியோரின் செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

அப்போது மாவட்ட நலவாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா, அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ரஜனி ஆகியோர் உடலில் தடுப்பூசி போட்டுக்கொண்டதுபோல் படம் பிடித்தனர்.

ஊசியை உடலில் படும்படி வைத்துக் கொண்டு அதைக் குத்தாமல் பொய்யாகப் படம் பிடித்து வெளியிடப்பட்டதற்குச் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறும் படங்களும் வீடியோக்களும் மட்டுமே மருந்தின் செயல்திறனை மெய்ப்பிக்கும் சான்றாகி விடாது எனப் பலரும் தெரிவித்துள்ளனர். மக்களை ஏமாற்றிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!