சசிகலா விடுதலை: தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்ப்பு!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்த நிலையில் சசிகலா விடுதலையாகியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 2017ல் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சற்று முன்னர் சசிகலா விடுவிக்கப்பட்டார்.

தற்போது பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் விடுதலை உத்தரவு வழங்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் பிப்ரவரி முதல் வாரம் சசிகலா சென்னை வருகை தரவுள்ளார், அவர் மீண்டும் வந்துள்ளதால் அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் மிகப்பெரிய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும் சிறையில் இருந்து விடுதலையானாலும் 6 ஆண்டுகாலம் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!