நேற்று அதிகளவிலான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் 755 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 369 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 62 பேரும், புறக்கோட்டை பகுதியில் 20 பேரும், மருதானை பகுதியில் 11 பேரும், புதுக்கடை பகுதியில் 10 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கொழும்பு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 449 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 124 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 80 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட நிட்டம்புவ பகுதியில் 15 பேரும், ராகமை பகுதியில் 13 பேரும், யக்கல பகுதியில் 10 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், காலி மாவட்டத்தில் 18 பேருக்கும், முல்லைதீவு மாவட்டத்தில் 15 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 15 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 22 பேருக்கும், தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்முனையில் 10 பேரும், அக்கப்பற்றில் நான்கு பேரும், தமன பகுதியில் ஒருவரும், தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஆறு தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இரண்டு பேர் சாவகர்சேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய நபர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 23 பேருக்கும், நுவரெலிய மாவட்டத்தில் இருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!