விவசாயிகளுக்கு எதிராக களமிறங்கிய பொதுமக்கள்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். விவசாயிகளில் ஒரு குழுவினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதைகளை விட்டு விலகி பேரணியாக சென்றதால் வன்முறை ஏற்பட்டது.

டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை முடித்த விவசாயிகள், ஏற்கனவே போராட்டம் நடத்திய எல்லைப்பகுதிகளுக்கு திரும்பி போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில், சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் தேசியக் கொடிகளை ஏந்தி அவர்கள் வந்திருந்தனர்.

போராட்டத்திற்காக அங்கு தொடர்ந்து முகாமிட்டுள்ள விவசாயிகளிடம், அந்த இடத்தை காலிசெய்து வெளியேற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!