போலந்தில் நள்ளிரவில் அமுலுக்கு வந்த சர்ச்சைக்குரிய சட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் வீதியில் போராட்டம்!

போலந்து நாட்டில் புதன்கிழமை நள்ளிரவு முதல் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் அமுலுக்கு வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடான போலந்தில் இந்த புதிய கருக்கலைப்பு தடைச் சட்டம் கடந்த அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்டபோது, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த கருக்கலைப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வருவதன்மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் கருவினால் உயிருக்கு பாதிப்பு உள்ள பெண்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த காரணங்களைத் தவிர தங்கள் சொந்த தேவைகளுக்காகவும் விருப்பத்திற்கேற்பவும் கருவை கலைத்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரும்பாலான பெண்கள் போலந்தின் தலைநகரான வார்சாவில் உள்ள தெருக்களில் நள்ளிரவு முதல் போராட்டம் நடத்திவருகினற்னர். ஏராளமானோர் கருப்பு உடைகளை அணிந்தும் கருப்பு கொடிகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகினற்னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!