கொழும்பு மாவட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்த அறிவித்தல்!

?????????????????????????????????????????????????????????
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் ஒரு சில பாடசாலைகளைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளையும் மீளத்திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, குறித்த பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு Rapid antigen பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டம் ராஜகிரியவில் ஜனாதிபதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் சுமார் 30 மானவர்களுக்கு Rapid antigen பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் மூலம் பாடசாலைகளில் கொரோனா தொற்றுப் பரவல் எந்தளவு உள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடியுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

அத்துடன், இந்த சோதனையானது மூலம் மாணவர்களின் நிலை, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் தொடர்பிலும் அறிந்துகொள்ள முடியுமெனவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!