முதல் அறிவிப்பை வெளியிட்டார் சசிகலா

அதிமுக-வின் பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அண்மையில் பொறுப்பேற்றார்.சசிகலா பொறுப்பேற்றதற்கு அதிமுக-வில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தீபாவும் தான் உரிய நேரத்தில் சரியான முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் வி.கே.சசிகலா, ஜனவரி 4ம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை, மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது. அதிமுகவின் மாவட்ட, நகர, பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொது செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சசிகலா வெளியிட்ட முதல் அறிவிப்பு இது ஆகும்.

Tags: