நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று: முழு விபரம் உள்ளே..!

நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 800 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் நேற்று மாத்திரம் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதும் 816 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், ஏனைய 10 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்தவர்கள் என கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 9 பேரும், தெமட்டகொடை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் தலா 8 பேரும், நாரஹென்பிட்டி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் தலா 7 பேரும், கிரேண்பாஸ் மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த தலா 6 பேரும், பொரளை பகுதியைச் சேர்ந்த 5 பேரும், கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் 132 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 131 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் 62 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 37 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 20 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 15 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 10 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா4 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து 58 ஆயிரத்து 75 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 585 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடைமுறைக்கமைய இதுவரை 95 ஆயிரத்து 550 பேருக்கு astrazeneca covishield தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!