குழந்தையை தானே சுமப்பார்கள்! 18 வருடமாக கத்தரிக்கோளை சுமந்த விநோதம் தெரியுமா..?

சிகிச்சை ஒன்றின்போது தவறுதலாக வயிற்றினுள் வைத்துத் தைக்கப்பட்ட கத்தரிக்கோல் பதினெட்டு வருடங்களின் பின் அகற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு, கார் விபத்து ஒன்றில் சிக்கிய மா வான் நாத் என்ற வியட்நாமியருக்கு சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின் பின் உடலைத் தைக்கும்போது, வயிற்றுப் பகுதிக்குள் கத்திரிக்கோல் ஒன்றை மறதியாக வைத்துத் தைத்துவிட்டனர்.

அண்மைக்காலமாக வயிற்று வலியால் தவித்து வந்த நாத்துக்கு அல்ட்ராசௌண்ட் பரிசோதனை செய்யப்பட்டபோதுதான், அவரது வயிற்றுக்குள் சுமார் பதினைந்து சென்றிமீற்றர் அளவுள்ள கத்திரிக்கோல், அதுவும் ஒரு பிடி உடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் இரண்டு மணி நேர சத்திர சிகிச்சை மூலம் நாத்தின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது.

அவருக்கு 1998ஆம் ஆண்டு சிகிச்சை செய்த மருத்துவர்கள் யார் என இப்போது வியட்னாமிய சுகாதாரத் துறை ஆராயத் தொடங்கியுள்ளது. ஏறக்குறைய இரண்டு தசாப்த காலமாக வயிற்றினுள் கத்திரிக்கோலுடனேயே இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கும் நாத்தைக் கண்டு மருத்துவர்கள் வியக்கின்றனர்.

Tags: