மியன்மாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

மியன்மாரில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கைதை தொடர்ந்து அந்நாட்டின் மீது மீண்டும் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக மியன்மாரில் ஜனநாயகம் மீறப்பட்டதாக தெரிவித்து தடைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாநாயகத்தை வலுப்பெறச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு பின்னர் நீக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மீளவும் தடைகள் விதிக்கப்படும் என தடைகள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 மக்கள் பிரதிநிதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிரித்தானியா கண்டனம் வௌியிட்டுள்ளது.

நேற்றைய தினம் (01) மியன்மாரின் நிர்வாக தலைவர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அந்நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!