போதைப்பொருள் பணியகத்தின் 13 அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 13 அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 16 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கருதப்படும் 19 ஆவது சந்தேக நபரை கைது சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!