பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை ஸ்தாபிக்க தீர்மானம்

அனைத்து கிராமங்களும் உள்ளடங்கும் வகையில், பொதுமக்களுக்கான பாதுகாப்பு குழுவொன்றை ஸ்தாபிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

கிராமங்களில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பல்வேறு சமூக சீர்கேடான செயற்பாடுகளை தடுப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை எடுப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!